search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "புழல் ஏரி"

    • கடந்த 24 மணி நேரத்தில் பூண்டி-9 செ.மீ., சோழவரம்-4 செ.மீ., மழை பதிவாகி உள்ளது.
    • புழல் ஏரிக்கான நீர்வரத்து 281 கனஅடியில் இருந்து 663 கனஅடியாக உயர்ந்துள்ளது.

    திருவள்ளூர்:

    சென்னை நகர மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், சோழவரம், கண்ணன் கோட்டை தேர்வாய் கண்டிகை ஏரிகள் உள்ளன. இந்த 5 ஏரிகளிலும் மொத்தம் 11 ஆயிரத்து 757 மி.கனஅடி தண்ணீர் சேமித்து வைக்கலாம்.

    வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் குடிநீர் ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது.

    சென்னைக்கு குடிநீர் வழங்கும் புழல், சோழவரம், பூண்டி, கண்ணன்கோட்டை ஏரிகளின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. நீர் இருப்பை நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள்.

    கடந்த 24 மணி நேரத்தில் பூண்டி-9 செ.மீ., சோழவரம்-4 செ.மீ., மழை பதிவாகி உள்ளது.

    புழல் ஏரிக்கான நீர்வரத்து 281 கனஅடியில் இருந்து 663 கனஅடியாக உயர்ந்துள்ளது. சோழவரம் ஏரிக்கான நீர்வரத்து 174 கனஅடியில் இருந்து 231 கனஅடியாக அதிகரித்துள்ளது.

    • செம்பரம்பாக்கம் ஏரிக்கு இன்று காலை நிலவரப்படி வெறும் 189 கனஅடி தண்ணீர் வந்தது.
    • சோழவரம் ஏரியின் மொத்த கொள்ளளவான 1081 மி.கனஅடியில் 642 மி.கனஅடி தண்ணீர் உள்ளது.

    பூந்தமல்லி:

    சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரிகளாக பூண்டி, செம்பரம்பாக்கம், புழல், சோழவரம், கண்ணன்கோட்டை ஏரிகள் உள்ளன. தொடர்ந்து பெய்து வந்த கனமழை காரணமாக குடிநீர் ஏரிகளுக்கு கடந்த 2 நாட்களாக நீர்வரத்து அதிகரித்து வந்தது

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று பலத்த மழை இல்லாததால் ஏரிகளுக்கு தண்ணீர் வரத்து குறைந்து உள்ளது.

    செம்பரம்பாக்கம் ஏரிக்கு இன்று காலை நிலவரப்படி வெறும் 189 கனஅடி தண்ணீர் வந்தது. ஏரியின் நீர்மட்டம் மொத்த உயரமான 24 அடியில் 22 அடியை தாண்டி உள்ளது. மொத்த கொள்ளளவான 3,645 மில்லியன் கனஅடியில் தற்போது 3,112 மில்லியன் கன தண்ணீர் உள்ளது. 166 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

    இதேபோல் புழல் ஏரிக்கும் நீர்வரத்து 258 கனஅடியாக சரிந்து உள்ளது. புழல் ஏரியின் மொத்த உயரம் 3300 மி.கனஅடி. இதில் 2751 மி.கனஅடி தண்ணீர் உள்ளது. 189 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. பூண்டி ஏரியின் நீர்மட்டம் 3231 மி.கனஅடி. இதில் 1867 மி.கனஅடி தண்ணீர் உள்ளது. ஏரிக்கு 120 கனஅடி தண்ணீர் வருகிறது. 68 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

    சோழவரம் ஏரியின் மொத்த கொள்ளளவான 1081 மி.கனஅடியில் 642 மி.கனஅடி தண்ணீர் உள்ளது. ஏரிக்கு 81 கனஅடி தண்ணீர் வருகிறது. 12 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. கண்ணன்கோட்டை தேர்வாய் கண்டிகை ஏரியில் மொத்த கொள்ளளவான 500 மி.கனஅடியில் 434 மி.கனஅடி தண்ணீர் உள்ளது. ஏரிக்கு 10 கனஅடி தண்ணீர் வருகிறது.

    சென்னைக்கு குடிநீர் வழங்கும் செம்பரம்பாக்கம், புழல் உள்பட 5 ஏரிகளிலும் மொத்தம் 11757 மி.கனஅடி தண்ணீர் சேமித்து வைக்கலாம். தற்போது 8806 மி.கனஅடி தண்ணீர் உள்ளது குறிப்பிடத்தக்கது.

    செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் 22 அடியை தாண்டி இருப்பதால் தொடர்ந்து கனமழை பெய்தால் ஏரியில் இருந்து உபரி நீர் திறக்க வாய்ப்பு உள்ளது. புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு வரும் தண்ணீரின் அளவை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள்.

    • உபரிநீர் திறப்பு அதிகரிக்கும்போது கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்படும்.
    • சோழவரம் ஏரி நீர்மட்டம் மொத்த உயரமான 18.86 அடியில் தற்போது 14.37 அடியை எட்டி உள்ளது.

    திருவள்ளூர்:

    செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் 22 அடியை தாண்டியதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். மேலும் அதிகாரிகள் கூறுகையில்,

    24 அடி உயரம் கொண்ட செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் 22 அடியை தாண்டியது. தற்போது நீர்வரத்து 301 கனஅடியாக உள்ள நிலையில், நீர் வெளியேற்றம் 162 கனஅடியாக உள்ளது. நீர்வரத்து அதிகரிக்கும் பட்சத்தில், உபரி நீர் திறப்பு அதிகரிக்கும்.

    உபரிநீர் திறப்பு அதிகரிக்கும்போது கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்படும்.

    21.20 அடி உயரம் கொண்ட புழல் ஏரியின் நீர்மட்டம் தற்போது 18.67 அடியை எட்டி உள்ளது.

    சோழவரம் ஏரி நீர்மட்டம் மொத்த உயரமான 18.86 அடியில் தற்போது 14.37 அடியை எட்டி உள்ளது.

    பூண்டி சத்தியமூர்த்தி நீர்த்தேக்கம் அதன் மொத்த உயரமான 35 அடியில் 30.52 அடியை எட்டி உள்ளது என்று தெரிவித்துள்ளனர்.

    • பூண்டி ஏரியில் அதன் மொத்த கொள்ளளவான 3231 மி.கனஅடியில் 1860 மி.கனஅடி தண்ணீர் உள்ளது.
    • சோழவரம் ஏரியில் மொத்த கொள்ளளவான 1081 மி.கனஅடியில் 627 மி.கனஅடி தண்ணீர் இருப்பு உள்ளது.

    திருவள்ளூர்:

    சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரிகளாக பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், சோழவரம், கண்ணன்கோட்டை ஏரிகள் உள்ளன. தற்போது வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் விட்டு விட்டு பலத்த மழை கொட்டி வருகிறது.

    நேற்று இரவு தொடங்கிய மழை விடிய, விடிய நீடித்தது. இதனால் குடிநீர் வழங்கும் ஏரிகளுக்கு நீர் வரத்து அதிகரித்து உள்ளது. புழல் ஏரிக்கு இன்று காலை நிலவரப்படி அதிகபட்சமாக 606 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. புழல் ஏரியின் மொத்த கொள்ளளவு 3300 மில்லியன் கனஅடி. இதில் இப்போது 2745 மி.கனஅடி தண்ணீர் நிரம்பி காணப்படுகிறது. மொத்தம் உள்ள 21 அடியில் 18.67 அடிக்கு தண்ணீர் உள்ளது. ஏரியில் இருந்து 189 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

    செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்த கொள்ளளவு 3645 மி.கனஅடி ஆகும். இதில் 3141 மி.கனஅடி தண்ணீர் உள்ளது. ஏரி 86 சதவீதம் நிரம்பி உள்ளது. மொத்த உயரமான 24 அடியில் 22.08 அடிக்கு தண்ணீர் உள்ளது. ஏரிக்கு 368 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது.160 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

    தொடர்ந்து பலத்த மழை பெய்து வருவதால் செம்பரம்பாக்கம், புழல் ஏரிகளில் தண்ணீர் இருப்பை பொதுப்பணித்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

    பூண்டி ஏரியில் அதன் மொத்த கொள்ளளவான 3231 மி.கனஅடியில் 1860 மி.கனஅடி தண்ணீர் உள்ளது. 80 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. 68 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. சோழவரம் ஏரியில் மொத்த கொள்ளளவான 1081 மி.கனஅடியில் 627 மி.கனஅடி தண்ணீர் இருப்பு உள்ளது. ஏரிக்கு 26 கனஅடிதண்ணீர் வருகிறது. கண்ணன்கோட்டை தேர்வாய் கண்டிகை ஏரியில் மொத்த கொள்ளளவான 500 மி.கனஅடியில் 435 மி.கனஅடி தண்ணீர் நிரம்பி உள்ளது. ஏரிக்கு 10 கனஅடி தண்ணீர் வருகிறது.

    தொடர்ந்து மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளதால் வரும் நாட்களில் குடிநீர் ஏரிகளுக்கு நீர் வரத்து மேலும் அதிகரிக்கும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.

    • வீராணம் ஏரிக்கு 350 கனஅடி நீர்வரத்து மூலம் ஏரியின் இருப்பு 318 மில்லியன் கனஅடியாக உள்ளது.
    • தற்போது பெய்துவரும் வடகிழக்கு பருவ மழை மூலம் சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் நீர் நிரப்பும் பணி நடந்து வருகிறது.

    சென்னை:

    சென்னை மாநகருக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் 3 ஆயிரத்து 300 மில்லியன் கன அடி (3.3 டி.எம்.சி.) கொள்ளளவு கொண்ட பூண்டி ஏரிக்கு கிருஷ்ணா நதிநீர் கால்வாய் மூலம் மழைநீர் 90 கனஅடி வருகிறது. இதன் மூலம் ஏரியின் கொள்ளளவு 1,833 மில்லியன் கன அடி (1.8 டி.எம்.சி.) ஆக நீர் மட்டம் உயர்ந்து உள்ளது. குடிநீர் தேவைக்காக 95 கனஅடி நீர் திறக்கப்படுகிறது.

    1,081 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட சோழவரம் ஏரிக்கு 104 கனஅடி நீர் வரத்து மூலம், ஏரியின் கொள்ளளவு 613 மில்லியன் கன அடியாக இருந்து வருகிறது. 12 கனஅடி நீர் திறக்கப்படுகிறது.

    3 ஆயிரத்து 300 மில்லியன் கனஅடி (3.3 டி.எம்.சி.) கொள்ளளவு கொண்ட புழல் ஏரிக்கு 386 கன அடி நீர்வரத்து மூலம் ஏரியின் கொள்ளளவு 2,726 மில்லியன் கன அடியாக (2.7 டி.எம்.சி.) உள்ளது.

    500 மில்லியன் கன அடி (அரை டி.எம்.சி.) கொள்ளளவு கொண்ட கண்ணன்கோட்டை-தேர்வாய் கண்டிகை ஏரிக்கு 10 கனஅடி நீர் வரத்து மூலம் ஏரியின் இருப்பு 438 மில்லியன் கனஅடியாக உயர்ந்துள்ளது. குடிநீர் தேவைக்காக 10 கனஅடி நீர் திறக்கப்பட்டு வருகிறது.

    செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்த கொள்ளளவு 3 ஆயிரத்து 645 மில்லியன் கனஅடி (3.6 டி.எம்.சி.) ஆகும். 153 கனஅடி நீர் வரத்து மூலம் ஏரியின் மொத்த கொள்ளளவு 3 ஆயிரத்து 132 மில்லியன் கனஅடி (3.1 டி.எம்.சி.) அதாவது 85.93 சதவீதம் நீர் இருப்பு உள்ளது.

    வீராணம் ஏரிக்கு 350 கனஅடி நீர்வரத்து மூலம் ஏரியின் இருப்பு 318 மில்லியன் கனஅடியாக உள்ளது. குடிநீர் தேவைக்காக 66 கனஅடி நீர் திறக்கப்படுகிறது.

    கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் அனைத்து ஏரிகளிலும் சேர்த்து 8 ஆயிரத்து 384 மில்லியன் கனஅடி (8.3 டி.எம்.சி.) நீர் இருந்தது. 13 ஆயிரத்து 222 மில்லியன் கனஅடி (13 டி.எம்.சி.) கொள்ளளவு கொண்ட அனைத்து ஏரிகளிலும் சேர்த்து தற்போது 9 டி.எம்.சி. இருப்பு உள்ளது. இது 68.52 சதவீதமாகும்.

    சென்னை மாநகருக்கு சராசரியாக ஒரு மாதத்துக்கு 1 டி.எம்.சி. வரை தேவைப்படும் நிலையில், அடுத்த 9 மாதத்துக்கு நீர் இருப்பு கைவசம் உள்ளது.

    கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் அனைத்து ஏரிகளிலும் சேர்த்து 8 ஆயிரத்து 384 மில்லியன் கன அடி (8.3 டி.எம்.சி.) நீர் இருந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது பெய்துவரும் வடகிழக்கு பருவ மழை மூலம் சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் நீர் நிரப்பும் பணி நடந்து வருகிறது. அதேநேரம் அணையின் பாதுகாப்பை கருதி உபரி நீரை திறக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்வரத்து மற்றும் திறப்பு ஆகியவை தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.

    இவ்வாறு நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பலத்த மழை கொட்டி வருகிறது.
    • தற்போது பருவமழை தீவிரம் அடைந்து உள்ளதால் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து உபரிநீர் திறக்க வாய்ப்பு உள்ளது.

    பூந்தமல்லி:

    சென்னை நகர மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக பூண்டி, செம்பரம்பாக்கம், புழல், சோழவரம், கண்ணன்கோட்டை ஏரிகள் உள்ளன. இந்த 5 ஏரிகளிலும் மொத்தம் 11 ஆயிரத்து 757 மில்லியன் கனஅடி தண்ணீர் சேமித்து வைக்கலாம். தற்போது ஏரிகளில் 8,227 மி.கனஅடி தண்ணீர் இருப்பு உள்ளது. இது மொத்த கொள்ளவில் 70 சதவீதம் ஆகும்.

    தற்போது வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பலத்த மழை கொட்டி வருகிறது. இதனால் சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரிக்க தொடங்கி உள்ளது.

    செம்பரம்பாக்கம் ஏரியில் தற்போது 22 அடிக்கு (மொத்த உயரம் 24 அடி) தண்ணீர் உள்ளது. மொத்த கொள்ளளவான 3,645 மி.கனஅடியில் 2665 மி.கனஅடி தண்ணீர் நிரம்பி காணப்படுகிறது. வழக்கமாக பலத்த மழை பெய்யும்போது செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் 22 அடியை தாண்டினால் உபரிநீர் கொசஸ்தலை ஆற்றில் திறக்கப்படும். கடந்த மாதம் கனமழை கொட்டியபோது செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து 100 கனஅடி உபரிநீர் திறக்கப்பட்டது. பின்னர் மழை இல்லாததால் உபரிநீர் நிறுத்தப்பட்டது.

    தற்போது பருவமழை தீவிரம் அடைந்து உள்ளதால் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து உபரிநீர் திறக்க வாய்ப்பு உள்ளது. இதனால் ஏரிக்கு வரும் நீர்வரத்தை அதிகாரிகள் தொடர்ந்து தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். இன்று காலை நிலவரப்படி செம்பரம்பாக்கம் ஏரிக்கு 108 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. 189 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

    புழல் ஏரியின் மொத்த கொள்ளளவு 3,300 மி.கன அடி ஆகும். தற்போது ஏரியில் 2,665 மி.கன அடி தண்ணீர் இருப்பு உள்ளது. இது மொத்த கொள்ளளவில் 80 சதவீதம் ஆகும். ஏரிக்கு 235 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. 189 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

    பூண்டி ஏரியின் மொத்த கொள்ளளவு 3231 மி.கனஅடி. இதில் 1854 மி.கனஅடி தண்ணீர் உள்ளது. எரிக்கு 100 கனஅடி தண்ணீர் வருகிறது. 245 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. கண்ணன் கோட்டை தேர்வாய் கண்டிகை ஏரியில் மொத்த கொள்ளளவான 500 மி.கனஅடி கனஅடியில் 439 மி.கனஅடி தண்ணீர் உள்ளது.

    இன்று காலை முதல் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கனமழை கொட்டி வருவதால் குடிநீர் ஏரிகளுக்கு தண்ணீர் வரத்து மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குடிநீர் ஏரிகளுக்கு நீர்வரத்தை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

    • கடந்த 2 நாட்களாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
    • சோழவரம் ஏரியில் மொத்த கொள்ளளவான 1081 மில்லியன் கனஅடியில் 587 மில்லியன் கனஅடி தண்ணீர் உள்ளது.

    திருவள்ளூர்:

    சென்னை நகர மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், சோழவரம், கண்ணன்கோட்டை ஏரிகள் உள்ளன. இந்த 5 ஏரிகளிலும் மொத்தம் 11 ஆயிரத்து 757 மில்லியன் கனஅடி தண்ணீர் சேமித்து வைக்கலாம். தற்போது ஏரிகளில் தண்ணீர் இருப்பு 8667மில்லியன் கனஅடி ஆக உள்ளது. இது மொத்த கொள்ளளவில் 73 சதவீதம் ஆகும்.

    இந்த நிலையில் தற்போது வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ள நிலையில் கடந்த 2 நாட்களாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. நேற்று காலை முதல் இரவு வரை விட்டு விட்டு கனமழை கொட்டியது.

    இதனால் குடிநீர் ஏரிகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து உள்ளது. இன்று காலை நிலவரப்படி புழல் ஏரிக்கு 686 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. புழல் ஏரியின் மொத்த கொள்ளளவு 3300 மில்லியன் கனஅடி. இதில் 2632மில்லியன் கனஅடி தண்ணீர் உள்ளது. சென்னை குடிநீர் தேவைக்காக 189 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

    இதேபோல் செம்பரம்பாக்கம் ஏரிக்கும் தண்ணீர் வரத்து அதிகரித்து வருகிறது. ஏரிக்கு நீர் வரத்து 362 கனஅடியாக உள்ளது. ஏரியின் மொத்த கொள்ளளவு 3645 மில்லியன் கனஅடி. இதில் 3135 மில்லியன் கனஅடி தண்ணீர் உள்ளது. 188 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்த உயரம் 24 அடி. தற்போது ஏரியின் நீர்மட்டம் 22 அடியை தாண்டி உள்ளது. ஏரிக்கு தண்ணீர் வரத்தை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள். பலத்த மழை பெய்தால் ஏரியில் இருந்து உபரிநீர் மீண்டும் திறக்கப்படும் என்று தெரிகிறது.

    பூண்டி ஏரியின் மொத்த கொள்ளவு 3231 மில்லியன் கனஅடி. தற்போது ஏரியில் 1872 மில்லியன் கனஅடி தண்ணீர் உள்ளது. ஏரிக்கு 160 கனஅடி தண்ணீர் வருகிறது. 545 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

    சோழவரம் ஏரியில் மொத்த கொள்ளளவான 1081 மில்லியன் கனஅடியில் 587 மில்லியன் கனஅடி தண்ணீர் உள்ளது. ஏரிக்கு 105 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. 12 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

    கண்ணன்கோட்டை தேர்வாய் கண்டிகை ஏரியில் மொத்த கொள்ளளவான 500 மில்லியன் கனஅடியில் 441 மில்லியன் கனஅடி தண்ணீர் உள்ளது. ஏரிக்கு 30 கனஅடி தண்ணீர் வருகிறது.

    • குடிநீர் ஏரிகளில் சோழவரம் ஏரியில் மட்டும் 50 சதவீதத்துக்கு கீழ் தண்ணீர் உள்ளது.
    • செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்த கொள்ளளவான 3645 மி.கனஅடியில் 3123 மி.கனஅடி தண்ணீர் இருப்பு உள்ளது.

    திருவள்ளூர்:

    சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரிகளாக பூண்டி, புழல்,செம்பரம்பாக்கம், சோழவரம், கண்ணன்கோட்டை ஏரிகள் உள்ளன. இந்த 5 ஏரிகளிலும் மொத்தம் 11 ஆயிரத்து 757 மில்லியன் கனஅடி தண்ணீர் சேமித்து வைக்கலாம்.

    கடந்த சில நாட்களாக பெய்து வரும் பலத்த மழை காரணமாக குடிநீர் ஏரிகளுக்கு தொடர்ந்து தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது.

    இதன்காரணமாக 35 அடி உயரம் உள்ள பூண்டி ஏரியில் நீர் இருப்பு 34 அடியை எட்டியது. இதேபோல் 24 அடி உயரம் உள்ள செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் கடந்த 2 நாட்களுக்கு முன்பு 22 அடியை தாண்டியது. இதைத்தொடர்ந்து பூண்டி, செம்பரம்பாக்கம் ஏரிகளில் இருந்து உபரி நீர் திறந்து விடப்பட்டது.

    இன்று காலை நிலவரப்படி குடிநீர் வழங்கும் 5 ஏரிகளிலும் மொத்தம் 9817 மில்லியன் கனஅடி தண்ணீர் உள்ளது. இது மொத்த கொள்ளளவில் 83 சதவீதம் ஆகும்.

    இந்த தண்ணீரை சென்னை குடிநீருக்கு தட்டுப்பாடின்றி 9 மாதத்துக்கு சப்ளை செய்யமுடியும். பருவமழை தொடங்குவதற்கு முன்பே குடிநீர் ஏரிகளில் போதுமான அளவு தண்ணீர் இருப்பதால் அடுத்த ஆண்டு சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு வர வாய்ப்பு இல்லை என்று அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

    குடிநீர் ஏரிகளில் சோழவரம் ஏரியில் மட்டும் 50 சதவீதத்துக்கு கீழ் தண்ணீர் உள்ளது. மற்ற ஏரிகள் அனைத்திலும் தண்ணீர் நிரம்பி காணப்படுகிறது. சிறிய ஏரியான கண்ணன்கோட்டை தேர்வாய் கண்டிகை ஏரி 96 சதவீதம் நிரம்பி இருப்பது குறிப்பிடத்தக்கது.

    புழல் ஏரியின் மொத்த கொள்ளளவு 3300 மி.கனஅடி.இதில் 2430மி.கனஅடிதண்ணீர் உள்ளது. ஏரிக்கு 325 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. 189 கனஅடி தண்ணீர் குடிநீர் தேவைக்காக வெளியேற்றப்படுகிறது.

    சோழவரம் ஏரியின் மொத்த கொள்ளளவு 1081மி.கனஅடி. இதில் 498மி.கனஅடி தண்ணீர் உள்ளது. ஏரிக்கு 22 கனஅடி தண்ணீர் வருகிறது.

    செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்த கொள்ளளவான 3645 மி.கனஅடியில் 3123 மி.கனஅடி தண்ணீர் இருப்பு உள்ளது. ஏரிக்கு 156 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. உபரி நீராக 100 கனஅடியும், குடிநீர் தேவைக்காக 237 கனஅடியும் வெளியேற்றப்படுகிறது.

    பூண்டி ஏரியில் மொத்த கொள்ளவான 3231 மி.கனஅடியில் 2589 மி.கனஅடி தண்ணீர் உள்ளது. ஏரிக்கு 180 கனஅடி தண்ணீர் வருகிறது. 550 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. கண்ணன்கோட்டை தேர்வாய் கண்டிகை ஏரியில் மொத்த கொள்ளவான 500 மி.கனஅடியில் 480 மி.கனஅடி நீர் நிரம்பி காணப்படுகிறது.

    • கடந்த சில நாட்களாக சென்னை மற்றும் காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் தொடர்ந்து பலத்த மழை பெய்து வருகிறது.
    • புழல் ஏரியில் மொத்த உயரமான 21 அடியில் 16.75 அடிக்கு தண்ணீர் உள்ளது.

    திருவள்ளூர்:

    சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரிகளாக பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், சோழவரம், கண்ணன்கோட்டை தேர்வாய் கண்டிகை ஏரிகள் உள்ளன. இந்த 5 ஏரிகளிலும் மொத்தம் 11,757 மில்லியன் கனஅடி தண்ணீர் சேமித்து வைக்கலாம்.

    கடந்த சில நாட்களாக சென்னை மற்றும் காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் தொடர்ந்து பலத்த மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக குடிநீர் வழங்கும் அனைத்து ஏரிகளுக்கும் நீர்வரத்து அதிகரிக்கத்தொடங்கியது. 5 ஏரிகளிலும் மொத்தம் 9,076 மி.கனஅடி தண்ணீர் உள்ளது. இது மொத்த கொள்ளளவில் 77 சதவீதம் தண்ணீர் இருப்பு ஆகும்.

    கடந்த மாதம் (செப்டம்பர்) முதல் வாரம் நிலவரப்படி குடிநீர் வழங்கும் 5 ஏரிகளிலும் சேர்த்து 7 டி.எம்.சி. தண்ணீர் இருந்தது. ஆனால் தற்போது ஏரிகளில் மொத்த நீர் இருப்பு 9 டி.எம்.சி.ஆக அதிகரித்து உள்ளது. கடந்த மாதத்தில் பெய்த தொடர் மழை காரணமாக ஒரு மாதத்தில் ஏரிகளில் நீர் இருப்பு 2 டி.எம்.சி அதிகரித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

    கிருஷ்ணா நீர் மற்றும், மழை நீர் வரத்து காரணமாக பூண்டி ஏரியின் நீர் மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. மொத்த உயரமான 35 அடியில் 34 அடியை நெருங்கியதால் ஏரியில் இருந்து 2500 கனஅடிவரை உபரிநீர் கொசஸ்தலை ஆற்றில் திறக்கப்பட்டது.

    இன்று காலை நிலவரப்படி பூண்டி ஏரிக்கு 1020 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. ஏரியின் நீர் இருப்பு மொத்த கொள்ளளவான 3231 மி.கனஅடியில் 2761 மி.கனஅடியாக உள்ளது. ஏரியில் இருந்து 1200 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

    இதேபோல் குடிநீர் வழங்கும் முக்கிய ஏரிகளான புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கும் நீர்வரத்து தொடர்ந்து உள்ளதால் நீர் இருப்பு வேகமாக உயர்ந்து வருகிறது.

    புழல் ஏரியில் மொத்த உயரமான 21 அடியில் 16.75 அடிக்கு தண்ணீர் உள்ளது. மொத்த கொள்ளளவான 3300 மி.கனஅடியில் 2359 மி.கனஅடிநீர் நிரம்பி இருக்கிறது. ஏரிக்கு 371 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது.

    செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்த உயரமான 24 அடியில் தண்ணீர் இருப்பு 22 அடியை நெருங்கி உள்ளது. இன்று காலை நிலவரப்படி 21.79 அடி தண்ணீர் நிரம்பி கடல்போல் காட்சி அளிக்கிறது. மொத்த கொள்ளளவான 3645 மி.கனஅடியில் 3064 மி.கன அடி தண்ணீர் உள்ளது. ஏரிக்கு 323 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது.

    சோழவரம் ஏரியில் மொத்த கொள்ளளவான 1081 மி.கனஅடியில் 418மி.கனஅடி மட்டுமே தண்ணீர் உள்ளது. ஏரிக்கு 374 கனஅடி தண்ணீர் வருகிறது. கண்ணன்கோட்டை தேர்வாய் கண்டிகை ஏரியில் 500 மி.கனஅடியில் 474 மி.கன அடி தண்ணீர் நிரம்பி இருக்கிறது. ஏரிக்கு 395 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது.

    • சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று இரவு முழுவதும் விட்டு விட்டு கன மழை கொட்டித்தீர்த்தது.
    • கனமழை காரணமாக சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து உள்ளது.

    திருவள்ளூர்:

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று இரவு முழுவதும் விட்டு விட்டு கன மழை கொட்டித்தீர்த்தது. இதேபோல் திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டத்திலும் பரவலாக பலத்த மழை பெய்தது.

    அதிகபட்சமாக ஆவடியில் 8 செ.மீட்டர் மழை பதிவாகி உள்ளது. இதேபோல் திருவள்ளூர் மாவட்டத்தில் மற்ற இடங்களில் பெய்த மழை அளவு (மி.மீட்டரில்) வருமாறு:-

    ஜமீன்கொரட்டூர்-74

    செங்குன்றம்-34

    கும்மிடிப்பூண்டி-5

    பள்ளிப்பட்டு-20

    ஆர்.கே.பேட்டை-54

    சோழவரம்-28

    பொன்னேரி-16

    பூந்தமல்லி-23

    திருவாலங்காடு-26

    திருத்தணி-32

    தாமரைப்பாக்கம்-23

    திருவள்ளூர்-54

    ஊத்துக்கோட்டை-3.

    கனமழை காரணமாக சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து உள்ளது. புழல் ஏரிக்கு அதிகபட்சமாக 536 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது.

    புழல் ஏரியின் மொத்த கொள்ளளவு3300 மி.கனஅடி. இதில் 1866 மி.கனஅடி தண்ணீர் இருப்பு உள்ளது.189 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

    செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்த கொள்ளளவு3645மி.கனஅடி. இதில் 2688 மி.கனஅடி தண்ணீர் இருப்பு உள்ளது. ஏரிக்கு 429 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது.

    சோழவரம் ஏரியின் மொத்த கொள்ளளவு 1081 மி.கனஅடி. இதில் 128 மி.கனஅடி தண்ணீர் உள்ளது. ஏரிக்கு 48 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. பூண்டி எரியின் மொத்த கொள்ளளவான 3231 மி.கனஅடியில் 2337 மி.கனஅடி தண்ணீர் நிரம்பி காணப்படுகிறது. ஏரிக்கு கிருஷ்ணா தண்ணீர் மற்றும் மழைநீர் சேர்ந்து 610 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. 80 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

    • பலத்த மழை இல்லாமல் சாரல் மழையாக பெய்தது.
    • காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களிலும் பரவலாக மழை கொட்டியது.

    காஞ்சிபுரம்:

    தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக கடந்த 2 நாட்களாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இரவு மற்றும் காலை நேரங்களில் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது.

    நேற்று இரவும் சென்னையில் பல்வேறு இடங்களில் மழை கொட்டியது. எழும்பூர், புரசைவாக்கம், பெரம்பூர், செங்குன்றம், புழல், அயனாவரம், கோயம்பேடு, கோடம்பாக்கம், போரூர், ராயபுரம், தண்டையார்பேட்டை, திருவொற்றியூர், மீனம்பாக்கம், வேளச்சேரி, தாம்பரம், ஆலந்தூர், திருவான்மியூர் உள்ளிட்ட இடங்களில் இரவு தொடங்கிய மழை அதிகாலை வரை நீடித்தது.

    பலத்த மழை இல்லாமல் சாரல் மழையாக பெய்தது. சில இடங்களில் சுமார் அரைமணிநேரம் மழை வெளுத்து வாங்கியது.

    இதேபோல் காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களிலும் பரவலாக மழை கொட்டியது. அதிகபட்சமாக திருவள்ளூர் மாவட்டம் ஆர்.கே.பேட்டையில் 9 செ.மீட்டர் மழை பதிவாகி உள்ளது.

    காஞ்சிபுரம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளான ஓரிக்கை, செவிலிமேடு, ஒலி முகமது பேட்டை, பாலு செட்டி சத்திரம், தாமல், வாலாஜாபாத், பரந்தூர், மாகரல், ஆர்ப்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் இன்று காலையும் மழை பெய்தது. இதனால் பள்ளி-கல்லூரிக்கு செல்லும் மாணவ-மாணவிகளும், வேலைக்கு செல்வோரும் அவதி அடைந்தனர்.

    திருவள்ளூர் ஆர்.கே.பேட்டை, திருத்தணி, ஊத்துக்கோட்டை, திருவாலங்காடு உள்ளிட்ட இடங்களில் மழை வெளுத்துவாங்கியது. இதனால் தாழ்வான இடங்களில் மழைநீர் தேங்கியது.

    • சென்னை குடிநீர் தேவைக்காக செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து 156 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.
    • கண்ணன்கோட்டை தேர்வாய் கண்டிகை ஏரியில் மொத்த கொள்ளளவான 500 மி.கனஅடியில் 344 மி.கனஅடி தண்ணீர் இருப்பு உள்ளது.

    சென்னை:

    சென்னை நகர மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக பூண்டி, புழல் செம்பரம்பாக்கம், சோழவரம், கண்ணன் கோட்டை தேர்வாய் கண்டிகை ஏரிகள் உள்ளன. இந்த 5 ஏரிகளிலும் மொத்தம் 11 ஆயிரத்து 757 மில்லியன் கனஅடி தண்ணீர் சேமித்து வைக்கலாம். தற்போது குடிநீர் ஏரிகளில் 6,816 மில்லியன் கனஅடி தண்ணீர் இருப்பு உள்ளது. இது மொத்த கொள்ளளவில் 58 சதவீதம் ஆகும்.

    குடிநீர் ஏரிகளில் அதிகபட்சமாக செம்பரம்பாக்கம் ஏரியில் தண்ணீர் இருப்பு 72 சதவீதம் உள்ளது. இந்த ஏரியின் மொத்த கொள்ளளவு 3645 மி.கனஅடி. இதில் 2,623 மி.கனஅடி தண்ணீர் இருப்பு உள்ளது. ஏரிக்கு நீர் வரத்து இல்லை. சென்னை குடிநீர் தேவைக்காக 156 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

    பூண்டி ஏரியின் மொத்த கொள்ளளவு 3231மி.கனஅடி. இதில் 1803மி.கனஅடி தண்ணீர் உள்ளது. ஏரிக்கு கிருஷ்ணா தண்ணீர் 130 கனஅடி வந்து கொண்டு இருக்கிறது. 70 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது.

    சோழவரம் ஏரியில் மொத்த கொள்ளளவான 1081மி.கனஅடியில் 110மி.கனஅடி மட்டுமே தண்ணீர் உள்ளது.

    புழல் ஏரியின் மொத்த கொள்ளளவான 3300மி.கனஅடியில் 1936மி.கனஅடி தண்ணீர் நிரம்பி காணப்படுகிறது. ஏரிக்கு 258கனஅடி தண்ணீர் வருகிறது. 189 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. கண்ணன்கோட்டை தேர்வாய் கண்டிகை ஏரியில் மொத்த கொள்ளளவான 500 மி.கனஅடியில் 344 மி.கனஅடி தண்ணீர் இருப்பு உள்ளது.

    பூண்டி எரிக்கு ஏற்கனவே கிருஷ்ணா தண்ணீர் வந்து கொண்டு இருக்கும் நிலையில் புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளிலும் போதுமான அளவு தண்ணீர் இருப்பதால் சென்னை நகரில் தட்டுப்பாடின்றி குடிநீர் வினியோகம் செய்ய முடியும் என்று அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

    ×